கணேஷ் பாபு இயக்கத்தில் வெளியான “டாடா” படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் கணேஷ் பாபு இயக்கும் அடுத்த படத்தில் துருவ் விக்ரம் நடிக்க போவதாக தகவல்கள் வெளியானது. கடந்த 2020-ஆம் ஆண்டு துருவ் விக்ரம் நடிப்பில் “மகான்” படம் உருவானது. அதன் பிறகு எந்த படமும் வெளியாகவில்லை. இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஸ்போர்ஸ் – ட்ராமா படம் ஒன்றிலும் நடிக்கிறார்.

இந்தப் படத்திற்கு பிறகு கணேஷ்பாபு இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்பட்டது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. கணேஷ் பாபு இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் ஏ.ஆர் ரகுமான் அது பொய்யான தகவல் என தெரிவித்ததொடு, துருவ் விக்ரம் நடிக்கும் படம் வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

படம் ஆரம்பிக்கும் முன்பே இவ்வளவு பிரச்சனைகள் இருக்க, துருவ் விக்ரமும் படத்திலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏ.ஆர் ரகுமான் இசை அமைக்காததால் தான் துருவ் விக்ரம் படத்திலிருந்து விலகியுள்ளார் என்ற செய்திகள் வலம் வருகிறது. எது என்னவோ துருவ் விக்ரம் படத்திலிருந்து விலகினால் கணேஷ் பாபு என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

