
CINEMA
இயற்கை கொஞ்சும் எழிலில் குடும்பத்துடன் ஒரு நாள்… வைரலாகும் சினேகா – பிரசன்னா ஜோடியின் Vactaion போட்டோஸ்.
தமிழ் சினிமா ரசிகர்கள் ‘புன்னகை இளவரசி’ என்று கொண்டாடப்படுபவர் நடிகை சினேகா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். பல ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழ் திரையுலகில் ‘என்னவளே’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக இணைந்து நடித்த முன்னணி நடிகையாக உயர்ந்தார். சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து ‘அச்சம் உண்டு அச்சம் உண்டு’ திரைப்படத்தில் இணைந்து நடித்தனர்.
அப்பொழுது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இதைத்தொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இன்று திரையுலகம் கொண்டாடும் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஆத்யந்தா, விஹான் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு திரை வாழ்க்கை விட்டு சற்று விலகி இருந்த நடிகை சினேகா தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘பட்டாசு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் ரீ என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து அவர் தற்பொழுது பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை சினேகா.
அவ்வப்பொழுது தனது குடும்ப புகைப்படங்களையும், போட்டோஷூட் புகைப்படங்களையும் இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் தனது குடும்பத்துடன் மலேசியாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு கணவர் பிரசன்ன , மகன் , மகள் என குடும்பத்தோடு இயற்கையின் அழகை ரசித்தவாறு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
View this post on Instagram