CINEMA
அப்டி என்னடா உங்களுக்கு தேவை இருக்கு?? மனசாட்சி இல்லையா உங்களுக்கு.. விரக்தியில் வீடியோ வெளியிட்ட பாக்கியலட்சுமி கோபி..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் குடும்பத்திற்காக தனது கனவை தியாகம் செய்து வாழும் பெண்ணாக பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இவரின் கணவராக கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.நடிகர் சதீஷின் நடிப்பிற்காக இந்த சீரியலை பார்ப்பவர்கள் ஏராளம். இவருக்கென்று சமூக வலைத்தளங்களில் தனியாக கோபி ஆர்மி என்று உருவாக்கப்பட்டு ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.
தற்போது இந்த சீரியலில் பாக்கியாவின் டிரைவிங் லைசென்ஸை எடுத்து உடைத்தது கோபி தான் என அனைவருக்கும் தெரியவந்துள்ளது. பல்வேறு திருப்பங்களுடன் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வருகிறது. நாளுக்கு நாள் நடிகர் சதீஷின் நடிப்பு இந்த சீரியலில் வெகுவாக ரசிகர்களை கவர்ந்துள்ளது . இவரை சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் சதீஷ். இவர் தற்பொழுது நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் இறப்பில் மீடியாக்கள் கேமராக்களை தூக்கிக் கொண்டு இறப்பின் போது கூட அவரை நிம்மதியாக விடாமல் துரத்தியதை கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த விடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இதோ அந்த வீடியோ…
View this post on Instagram