பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தனது குடும்பத்துடன் சென்னை டி.டி.கே சாலையில் வசித்து வருகிறார். இவரது மகள் மீரா 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடமாக மீரா மன அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்றுக் கொண்டதாக தெரிகிறது. நேற்று அதிகாலை 3 மணிக்கு மீரா தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று பிரேத பரிசோதனை முடிந்து மீராவின் உடல் விஜய் ஆண்டனி- பாத்திமா தம்பதியினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலுக்கு திரை பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் போலீசார் மீரா எழுதிய ஒரு கடிதத்தை கைப்பற்றியுள்ளனர்.

அந்த கடிதத்தில் “Love you all… Miss you all எனத் தொடங்கி பத்து வரிகளில் மீரா ஆங்கிலத்தில் எழுதி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். எனது நண்பர்களையும், ஆசிரியர்களையும் நான் மிஸ் பண்ணுவேன். நான் இல்லாமல் எனது குடும்பம் தவிக்கும். நானும் எனது குடும்பம் இல்லாமல் தவித்து போவேன்.
எல்லோரும் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் இருங்க” என மீரா கடிதத்தில் எழுதியுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தை மீரா இறப்பதற்கு முன்பு எழுதினாரா? அல்லது சில நாட்களுக்கு முன்பே எழுதி வைத்து தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருந்தாரா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

