சொந்த மண்ணிலேயே கோட்டை விட்ட இயக்குனர் அட்லீ.. புதிய தகவலால் அதிர்ச்சியில் ‘ஜவான்’ பட குழுவினர்..

By admin on புரட்டாதி 15, 2023

Spread the love

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பல்வேறு தடைகளை தாண்டி ஜவான் படம் வெற்றிகரமாக எடுக்கப்பட்டது. இந்த படம் செப்டம்பர் 7-ஆம் தேதி உலகம் முழுவதும் இருக்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியிடப்பட்டது.

இந்த திரைப்படத்தின் மூலமாக நடிகை நயன்தாராவும், இசையமைப்பாளர் அனிருத்தும் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தது குறிப்பிடத்தக்கதாகும். ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஜவான் படம் வெளிநாடுகளிலும் உச்சத்தை தொட்டது.

   

   

ஒரே வாரத்தில் ஜவான் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் முக்கியமான இரண்டு இடங்களில் படம் தோல்வி அடைந்ததாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தமிழ்நாடு, கேரளா மாநிலத்தில் ஜவான் திரைப்படம் போட்ட பணத்தை கூட எடுக்கவில்லை.

 

கேரளாவில் படம் தோல்வி ஆனதை உறுதி செய்துள்ள நிலையில் தமிழகத்தில் இதுவரை 32 கோடி வசூலானது. இன்னும் நான்கு கோடி ரூபாய் வசூல் செய்தால் மட்டுமே தமிழகத்தில் ஜவான் திரைப்படம் நஷ்டம் அடைவதை தடுக்க முடியும் என்பதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.