விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஃபரீனா.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்த சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா.

இந்த சீரியலில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் ஃபரினா ஆசாத். இந்த சீரியலில் வில்லத்தனமான ரோலாக இருந்தாலும் இந்த கேரக்டர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதில் நடித்துக் கொண்டிருக்கும் போதே கர்ப்பமானதால் அவர் சிறைக்குச் செல்வது போல கதை மாற்றப்பட்டு பிறகு குழந்தை பிறந்தது மீண்டும் அதே சீரியலில் நடிக்க தொடங்கினார்.

இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஆண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு பாரதி கண்ணம்மா 2 சீரியல் எனும் இவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த நிலையில் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பரீனா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

அதன்படி தற்போது வித்தியாசமான லுக்கில் அவர் வெளியீட்டு விழா லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

