Connect with us

CINEMA

‘நெடுஞ்சாலை’ படத்தில் நடித்த இந்த நடிகையை உங்களுக்கு ஞாபகம் இருக்கா?… இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?…

தமிழில் ‘நெடுஞ்சாலை’ படத்தின் மூலம், தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை ஷிவதா. மேலும் ’அதே கண்கள்’, ஸிரோ, ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். திருமணத்திற்கு பிறகும், தொடர்ந்து கதாநாயகியாகவே நடித்துவந்தார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முரளிகிருஷ்ணன் என்பவரை காதலித்து, திருமணம் செய்துகொண்டார்.

   

இதைதொடர்ந்து கர்ப்பமான இவர் திரையுலகை விட்டு சற்று ஒதுங்கியே இருந்தார். இவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. நடிகை ஷிவதா தனது பெண் குழந்தைக்கு ‘அருந்ததி’ என்று  பெயர் சூட்டியுள்ளார். இவர் நடிகர் ஆரி அர்ஜுனன் உடன் நடித்து  2014 ஆம் ஆண்டு கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான நெடுஞ்சாலை படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

தனது சிறப்பான நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் நடிகை ஷிவதா.  தமிழ் சினிமாவில் குறைந்த படங்களே நடித்து இருந்தாலும் இவர் மலையாளத்தில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை ஷிவதா அவர்கள் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

Continue Reading

More in CINEMA

To Top