Connect with us

Tamizhanmedia.net

டாப் ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் ‘சூப்பர் சிங்கர்’ பென்னி தயாளின் மனைவி… வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

CINEMA

டாப் ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் ‘சூப்பர் சிங்கர்’ பென்னி தயாளின் மனைவி… வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

சாமானியர்களும் சூப்பர் சிங்கர் ஆக முடியும் என்பதை உணர்த்தும் வகையில் விஜய் டிவி அமைத்த மேடை தான் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி.

   

இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து சீசன் 2 சீசன் 3 சீசன் 4 என சென்று கொண்டே உள்ளது.

தற்பொழுது சீனியருக்கான சீசன் முடிவடைந்த நிலையில் ஜூனியருக்கான சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருப்பவர் தான் பின்னணி பாடகர் பென்னி தயாள்.

இவர் குரலில் பாடி வெளிவந்த உனக்கென்ன வேணும் சொல்லு, டார்லிங் டம்பக்கு, ஓமன பெண்ணே ஆகிய பாடல்கள் இன்றும் பலருடைய மனதில் இருந்து நீங்காத இடத்தை பிடித்துள்ளது. பின்னணி பாடகர் பென்னி தயாள்  2016 இல் கேத்ரின் தங்கம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு தற்பொழுது குழந்தைகளும் உள்ளனர். சமீபத்தில் ஓணம் பண்டிகை  நிறைவடைந்ததையொட்டி பிரபலங்கள் பலரும் தங்களது ஓணம் பண்டிகை புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

அந்தவகையில் தற்பொழுது பாடகர் பென்னி தனது குடும்பத்தோடு ஓணம் கொண்டாடிய புகைப்பங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.

More in CINEMA

To Top