“என்னுடைய உச்சம், உனக்கு ஏன் அச்சம்”.. விஜய் போஸ்டரை தாறுமாறாக கிழித்த ரஜினி ரசிகர்… சூடு பிடிக்கும் ரசிகர்கள் சண்டை..!!

By Nanthini on ஆவணி 7, 2023

Spread the love

கடந்த சில நாட்களாகவே சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சை பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. விஜயின் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று கூறிய நிலையில் அது சர்ச்சையை கிளப்பியது. சரத்குமாரின் அந்த பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் ஆதரவு தெரிவித்தாலும் ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் விஜய் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் மாறி மாறி சண்டையிட்டு வருகிறார்கள்.

   

இதனிடையே சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியான நிலையில் அதில் “பேர தூக்க நாலு பேரு, அத்தனை பட்டத்தை பறிக்க 100 பேரு, குட்டி சுவத்தை எட்டிப் பார்த்தா, உசுரு கொடுக்க கோடி பேரு “என்ற வரிகள் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் காக்கா மற்றும் கழுகு கதையை ரஜினி கூறி மேலும் சர்ச்சையை கிளப்பினார்.

   

 

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் ரஜினியை வம்புக்கு இழுக்கும் விதமாக மதுரையில் போஸ்டர் ஒட்டி பரபரப்பை கிளப்பியுள்ளனர். அந்த போஸ்டரில் என்னுடைய உச்சம் உனக்கு ஏன் அச்சம் என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில் அதில் ஒருவர் போஸ்டரை தாறுமாறாக கிழித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வர அதனை ட்விட்டரில் பகிர்ந்து அதற்கும் விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.