கடந்த காலத்தை நினைத்து கண்ணீர் விட்டு அழும் பிக் பாஸ் ரக்ஷிதா… ‘உங்கள இப்படி பாக்க முடியல’… வீடியோவை பார்த்து வருத்தத்தில் ரசிகர்கள்…

By Begam on ஆடி 25, 2023

Spread the love

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் நடிகை ரக்ஷிதா  மகாலட்சுமி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். அந்த சீரியலில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் தான்.

   

இந்த சீரியல் மூலம் மீனாட்சி ஆக ஒவ்வொரு தமிழ் குடும்பங்களிலும் வாழக்கூடிய பெண்களின் மனதில் இடம் பிடித்தார்.  இதைத்தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசனில் ஹீரோயினியாக நடித்து பெரும்பாலான ரசிகர்களை தன்வசம் இழுத்தார். சீரியலோடு நின்றுவிடாமல் பல ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக பங்கேற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

   

 

இவர் சீரியல் நடிகர் தினேஷை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களின் திருமணம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக பல வதந்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் கூட ரட்சிதா தினேஷ் மீது ஆபாச வார்த்தைகள் பேசியதாக புகார் அளித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து சமீபத்தில் இவர் ஆந்தையின் உருவத்தை நெஞ்சில் டாட்டூ குத்தியிருந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.  சோசியல் மீடியோவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி. இவர் தற்போது தனது கடந்த  காலத்தை நினைத்து எமோஷனலாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்பதிவினை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு….