ஆன்மிக பயணத்தை முடித்துவிட்டு… பாலி தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை சமந்தா… வெளியான ஹாட் புகைப்படங்கள்…

By Begam on ஆடி 24, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்பொழுது இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் நடிப்பில் வெளிவந்த ‘யசோதா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.

   

இதை தொடர்ந்து நடிகை சமந்தாவின் நடிப்பில் இறுதியாக ‘சகுந்தலம் ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சங்களையே பெற்றது. தற்போது இவர் விஜய் தேவர் கொண்டா உடன் இணைந்து ‘குஷி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  மேலும் ஹிந்தியில் வெப் சீரியஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார் நடிகை சமந்தா.

   

 

‘குஷி’ திரைப்படத்தை தொடர்ந்து சமந்தா நடிப்பை விட்டு விலக இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது கடந்த ஒரு வருடம் ஆகவே சமந்தா மையோ சிட்டிஷ்  என்ற நோயால் பாதிக்கப்பட்டு வருவதால் அவர் தீவிர சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு மேலாக சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்திருக்கும் சமந்தா தற்போது மன நிம்மதிக்காக தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர்  வேலூரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ நாராயணி தங்க கோயில் சாமி தரிசனம் செய்தார்.அதை தொடர்ந்து கோவை ஈஷா மையத்திற்கு சென்றார்.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலானது. தற்பொழுது நடிகை சமந்தா ஆன்மிக பயணத்தை முடித்துவிட்டு ஜாலியாக பாலி தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். தற்பொழுது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.