நிறைமாத வயிற்றுடன் கர்ப்பகால போட்டோ சூட் நடத்திய ‘சந்திரலேகா’ சீரியல் நடிகை வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

By Samrin on ஆடி 23, 2023

Spread the love

சந்திராலேகா சீரியல் நடிகை தான் ஸ்வேதா பண்டேகரு. இவர் எம்.ஆர் பொறியியல் கல்லூரியில் தன் படிப்பை முடித்தார். இதை தொடர்ந்து அவர் ஆரம்பத்தில் சில  விளம்பர படங்கள் நடித்தார்.அதன் பிறகு  2007 ஆம் ஆண்டு அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளியான ‘ஆழ்வார்’ திரைப்படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தார்.

   

இதை தொடர்ந்து   நான் தான் பாலா, பூவா தலையா போன்ற திரைப்படங்களில் நடித்து உள்ளார்.இவர் 2008 ஆம் ஆண்டு சத்யா நடிப்பில் வெளியான ‘வள்ளுவன் வாசுகி’ என்ற படத்தில்  கதாநாயகியாக அறிமுகமானார்.

   

 

இந்த படம் பெரும் தோல்வியை தழுவிய நிலையில்  சுவேதாவிற்கு அடுத்ததாக கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை.இதனால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி துணை கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வந்தார்.

இவர் தமிழ் மட்டுமல்ல  தெலுங்கிலும் ஒரு படம் நடித்திருக்கிறார். இதுவரை  9 திரைப்படங்களில்  நடித்துள்ளார்.சுவேதா இறுதியாக ஜெயம்ரவி நடிப்பில் வெளியான ‘பூலோகம்’ படத்தில் நடித்திருந்தார்.

அந்தப் படத்தில் மல்யுத்தம் நடக்கும் போட்டியில் போட்டி அறிவிப்பாளராக  ஒரே ஒரு காட்சியில் மட்டும் தோன்றியிருந்தார். இவருக்கு  சினிமா கை கொடுக்கவில்லை என்றாலும் சிந்தால் சோப், உதய கிருஷ்ணன் அசல் நெய் போன்ற விளம்பரங்களில் நடித்துள்ளார்.

சினிமாவின் வாய்ப்பு குறைய 2009 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான ‘மகள்’ என்ற தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.அதன் பின்னர்  சந்திரலேகா, நிலா போன்ற பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

நடிகை ஸ்வேதா பண்டேகரு  முடிந்த கையோடு தான் காதலித்து வந்த மால் முருகா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர் ஒரு பிரபல தொகுப்பாளர்.  நடிகை ஸ்வேதா பண்டேகரு   மாசம் உள்ளார். இவருக்கு   சமீபத்தில்  வளைகாப்பு  நடை பெற்றது. தற்போது போட்டோ சூட் நடத்தியுள்ளார். தற்போது இந்த  புகைப்படமானது   இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.