Connect with us

CINEMA

நடிகர் விஜய் நடித்த படத்தில் அவருக்கு சகோதரியாக நடித்த நடிகைகள் யார் தெரியுமா?..

தமிழ் சினிமாவில் மிகவும்  பிரபலமான நடிகர் விஜய். இவர் நடித்த படங்களில் இவருக்கு தங்கையாக நடித்த நடிகைகளை பற்றி இதில் காண்போம்.

1.மாண்புமிகு மாணவன்:

   

இயக்குனர் எஸ் எ சந்திரசேகர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான படம் ‘மாண்புமிகு மாணவன்’ இப்படத்தில் நடிகர்  விஜய்க்கு  தங்கையாக கவிதா கதாபாத்திரத்தில் நடித்தவர் எஸ் கவிதா.

2.என்றென்றும் காதல்:

இயக்குனர் மனோஜ் பட்நாகர் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான படம் ‘என்றென்றும் காதல்.’ இந்த படத்தில் விஜயின் தங்கையாக பூஜா  என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை பானுப்ரியா.

3.ஃபிரண்ட்ஸ்:
இயக்குனர் சித்திக் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஃபிரண்ட்ஸ்’ இந்த படத்தில் விஜய்யின் தங்கையாக  அமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி.

4.தமிழன்:

இயக்குனர் மஜீத் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான படம் ‘தமிழன்’ இப்படத்தில் விஜயின் சகோதரியாக ஜெயா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ரேவதி.

5.திருப்பாச்சி:

இயக்குனர் பேரரசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான படம் ‘திருப்பாச்சி’ இதில் விஜயின் சகோதரியாக கற்பகம் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை மல்லிகா.

6.கில்லி:

இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கில்லி’.இந்த  படத்தில் விஜய்யின் தங்கையாக புவனா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஜெனிபர்.

7.சிவகாசி:

இயக்குனர் பேரரசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சிவகாசி’. இப்படத்தில்  விஜயின் தங்கையாக வைரம் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை லக்ஷனா.

8.குருவி:

இயக்குனர்  தரணி இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான படம் ‘குருவி’ இப்படத்தில் வெற்றி வேலின்  சகோதரியாக நடித்தவர் நடிகை நிவேதா தாமஸ்.

9.வேலாயுதம்:

இயக்குனர் ஜெயம் ராஜா இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான படம் ‘வேலாயுதம்’ இப்படத்தில் விஜய் தங்கையாக காவேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சரண்யா மேனன்.

Continue Reading

More in CINEMA

To Top