சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எந்த அளவிற்கு வசூலை அள்ளுமோ அந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் படங்களும் வசூல் சாதனை படைத்துள்ளன. மிமிக்ரி செய்வதில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. இறுதியாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் ஓரளவு ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றது. அடுத்ததாக அயலான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூர் பூங்காவில் உள்ள ஷேரு என்ற மூன்று வயது ஆண் சிங்கத்தை 6 மாதத்திற்கு தத்தெடுத்துள்ளார். இதற்கு முன்பாக சிவகார்த்திகேயன் யானை மற்றவற்றை தத்தெடுத்துள்ள நிலையில் தற்போது சிங்கத்தை தத்தெடுத்துள்ளார். விலங்குகளை தத்தெடுப்பவர்கள் அந்த விலங்குகளுக்கான பராமரிப்பு செலவுகளை அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

