தனது காதலருடன் கிளாமர் ஃபோட்டோ ஷூட் நடத்திய நடிகை தமன்னா… கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படியா?…

By Begam on ஆனி 19, 2023

Spread the love

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக இருக்கும் நடிகை தமன்னா. தமிழில் அயன், தர்மதுரை, சுறா, சிறுத்தை, வீரம் போன்ற ‌சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ள நடிகை தமன்னா, தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தியிலும் நடித்து வருகிறார்.

   

சில வருடங்களால் தமிழில் நடிக்காமல் இருந்து வந்த அவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’ கதாநாயகியாக நடித்து வருகிறார். இதற்கிடையே பிரபல நடிகர் விஜய் வர்மாவை, நடிகை தமன்னா காதலிப்பதாகவும், டேட்டிங்கில் இருப்பதாகவும் கடந்த சில மாதங்களாக தகவல் பரவி வருகிறது.

   

 

இந்நிலையில் விஜய் வர்மாவுடனான தனது காதலை நடிகை தமன்னா உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்த பேட்டி ஒன்றில் ‘ஒருவருடன் இணைந்து நடிக்கிறோ‌ம் என்பதால் அவர் மீது ஈர்ப்பு வந்துவிடாது. பல நடிகர்களுடன் நான் நடித்துள்ளேன். ஒருவர் யார் மீதாவது காதலில் விழவேண்டும் என்றால் அந்த ஒருவருக்காக எதையாவது உணரவேண்டும்.


நான் எனக்கான உலகத்தை உருவாக்கி வைத்துள்ளேன். இந்தியாவில் ஒரு பெண் தனது வாழ்க்கை துணைக்காக தன்னை மாற்றிக் கொள்ளவேண்டும். எனது உலகத்தை புரிந்துக் கொண்ட ஒருவர் கிடைத்துள்ளார். அவரை நான் காதலிக்கிறேன். விஜய் வர்மா எனது மகிழ்ச்சியான இடம்’என்று தெரிவித்திருந்தார்.

தற்பொழுது நடிகை தமன்னாவும் , நடிகர் விஜய் வர்மாவும் இணைந்து lust stories என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இதன் ப்ரோமோஷனுக்காக நடத்தப்பட்ட கிளாமர் போட்டோஷூட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.