என்ன அழகு… மேக்கப் இல்லாமயே இவ்ளோ அழகா?… வைரலாகும் பிக் பாஸ் ரித்விகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

By Begam on ஆனி 19, 2023

Spread the love

மெட்ராஸ் திரைப்படம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. மெட்ராஸ் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து கபாலி திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் நடிகை ரித்திகா. இதைத்தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 2ல் 16 போட்டியாளர்களில் ரித்விகாவும் ஒரு போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டார்.

   

போட்டியின் ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டில் ரித்விகா உள்ளாரா என்ற சந்தேகம் பலருக்கு வந்தது அதற்கு காரணம் அவர் சரியாக எந்த டாஸ்க்கிலும் பங்கேற்பது இல்லை, வீட்டில் உள்ளவர்களிடம் சரியாக பழகுவதில்லை. ஓன்று அல்லது இரண்டு வாரங்களில் இவர் வீட்டை விட்டு வெளியேற்ற படுவர் என மக்கள் அனைவரும் கருத்து தெரிவித்துவந்தனர்.

   

 

ஆனால் அடுத்தடுத்த நாட்களில் தனது திறமையால் தன்னை வெளி உலகிற்கு காட்டி பிக் பாஸ் சீசன் இரண்டின் வெற்றியாளராக மகுடம் சூட்டியுள்ளார் நடிகை ரித்விகா. சுமார் 100 நாட்களுக்கு மேல் நடைபெற்ற இந்த போட்டியில், இறுதியில் ரித்விகா வெற்றிவாகை சூடினார். இதைத்தொடர்ந்து அவருக்கு வெள்ளித்திரையிலும் வாய்ப்புக்கள் குவியத் தொடங்கியது.

இவர் தற்பொழுது பல திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை ரித்விகா. தற்பொழுது இவரின் மேக்கப் இல்லாத புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘எவ்வளவு அழகு’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.