ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் வில்லி வனஜா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல் நடிகை லட்சுமி.

இவர் பல்வேறு சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஊர் வம்பு லட்சுமி என்றால் எல்லோருக்கும் தெரியும்.

செம்பருத்தி சீரியலில் நடித்து வந்த லட்சுமி அதே ஜீ தமிழில் ஒளிபரப்பான பேரன்பு சீரியலிலும் நடித்துள்ளார்.

ஆரம்பத்தில் மிகவும் குண்டாக இருந்த லட்சுமி உடல் எடை குறைப்பு சர்ஜரி செய்து தனது உடல் எடையை குறைத்து தற்பொழுது படுஸ்லிம்மாக அழகாக மாறியுள்ளார்.

இவர் பல்வேறு சீரியல்கள் மற்றும் திரைப்படங்களிலும் தற்பொழுது நடித்து வருகிறார். எப்பொழுதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் சீரியல் நடிகை லட்சுமி.

இவர் சீரியலில் வில்லியாக நடித்து வந்தாலும் இன்ஸ்டாவில் எப்போதும் ஜாலியாக போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவு செய்து கொள்கிறார்.


இன்று சீரியல் நடிகை லட்சுமி தனது பிறந்த நாளை குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

தற்பொழுது இந்த புகைப்படங்களை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

