இந்த புகைப்படத்தில் க்யூட்டாக இருக்கும் இளம் பிரபல நடிகர் யார் தெரியுமா?… அடடே இவரா?… கண்டுபிடிச்சிட்டீங்களா!….

By Begam on வைகாசி 17, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் வளரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் தமிழ் சினிமாவில் ‘சிந்து சமவெளி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.

   

இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். தற்போது இவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

   

 

நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு சமீபத்தில் இவருக்கு நர்மதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இத்த திருமண விழாவில் பிரபலங்களும் குடும்பத்தினரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இத்திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இதைத்தொடர்ந்து சமீபத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது மனைவியுடன் ஹனி மூன் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை  கூட இணையத்தில் பதிவு செய்திருந்தார். சமீப காலமாகவே பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது அந்த வகையில் தற்போது நடிகர் ஹரிஷ் கல்யாணின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.