ராதிகாவிடம் மீண்டும் மாட்டிக் கொள்ளும் கோபி… மேடையில் தன் தாயை கௌரவப்படுத்திய இனியா… வைரல் லேட்டஸ்ட் ப்ரோமோ…

By Begam on வைகாசி 17, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியா என்ற கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ராவும் கோபிகாதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ், வில்லியாக ராதிகா கதாபாத்திரத்தில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியும் நடித்து வருகின்றனர். தற்போது இந்த சீரியல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.

   

இந்நிலையில் பாக்கியாவின் வீட்டில் வந்து கோபி மற்றும் ராதிகா இருவரும் தங்கி உள்ளனர். இதனால் தொடர்ந்து குடும்பத்திற்குள் அவ்வப்பொழுது பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது. ராதிகாவை பாட்டி தொடர்ந்து திட்டிக் கொண்டு வருவதையும் நாம் பார்த்து வருகிறோம்.

   

 

இதை தொடர்ந்து இந்த வாரத்திற்கான ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் இனியா அவளுடைய பள்ளி விழாவில் பேசும்பொழுது அம்மா பாக்யாவை பற்றி தான் பெருமையாக பேசுகிறார். ஆனால் அங்கு இருக்கும்  தனது அப்பா கோபியை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. ஆனால் எதையும் கண்டுக்காத கோபி தன் மகள் பேசுவதே ரசித்து வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இதை தொடர்ந்து அங்கு வரும் ராதிகாவிடம் மாட்டிக் கொள்கிறார் கோபி. இனியாவுக்காக இவ்வளவு செய்றீங்க ஆனா மயூவை  ஏன் பள்ளிக்கு அழைத்து வரவில்லை என்று கேட்டு கோபியை திட்டுகிறார் ராதிகா. இனியவால் அவமதிக்கப்பட்டும் தற்பொழுது ராதிகாவிடம் மாட்டிக் கொண்டும் படாதபாடு பட்டு வருகிறார் கோபி.  இதோ அந்த ப்ரோமோ வீடியோ…