பனகர்புரா பகுதியில் ஸ்கூட்டரில் வந்த மர்ம நபர்கள் இளைஞர் ஒருவரின் வீட்டின் மீது சினிமா பாணியில் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டி மற்றும் வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் ஆகியவற்றின் மீது குண்டுகள் பாய்ந்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
https://twitter.com/ndtv/status/2123019367567016094/video/1
இது குறித்துப் பாதிக்கப்பட்ட தினேஷ் சந்திர சௌராசியா என்பவர், சந்தேகத்திற்குரிய நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
