என்னைத் திருமணம் செய்துகொள்… 22 வயது காதலியின் மிரட்டலால்… ரயில் முன் பாய்ந்து SI தற்கொலை… 6 மாதக் குழந்தையுடன் கதறும் மனைவி… உ . பி – யில் நேர்ந்த கொடூரம்…!

By Swetha on கார்த்திகை 18, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியாவில் பணியாற்றி வந்த 28 வயதான காவல் உதவி ஆய்வாளர் சந்தீப் குமார், கடந்த நவம்பர் 14-ஆம் தேதி இரவு ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அருகிலிருந்த புல்லட் மோட்டார் சைக்கிளைக் கைப்பற்றி சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

ஏற்கனவே திருமணமாகி ஆறு மாதக் குழந்தை உள்ள நிலையில், குமார் சிக்கந்தர்பூரைச் சேர்ந்த ரோலி கோண்ட் என்ற 22 வயதுப் பெண்ணுடன் திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருந்துள்ளார். அந்தப் பெண் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு குமாரை வற்புறுத்தி மிரட்டி வந்ததே தற்கொலைக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

   

குமாரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், தற்கொலைக்குத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ரோலி கோண்டை போலீசார் ரயில் நிலையம் அருகே கைது செய்தனர். கைதான அந்தப் பெண் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மற்றொரு காவல்துறை அதிகாரி மீதும் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.