ஆஸ்திரேலியாவின் ட்ரம்மோய்ன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகளுக்கு இடையிலான மகளிர் பிக் பாஷ் லீக் போட்டியின் போது நடுவருக்குப் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் வீராங்கனை நவோமி ஸ்டாலன்பெர்க் எறிந்த பந்து, தவறுதலாக அங்கிருந்த பெண் ஸ்கொயர்-லெக் நடுவரின் கழுத்தின் பின்பகுதியில் வேகமாகத் தாக்கியது.
பின்புறத்திலிருந்து வந்த பந்தை எதிர்பாராத நடுவர், பேட்டர்கள் ஓட்டத்தை முடிக்கிறார்களா என்பதைக் கவனித்துக் கொண்டிருந்ததால் இந்தத் தாக்குதலுக்கு உள்ளானார். பந்து பலமாகத் தாக்கியதில் அதிர்ச்சியடைந்த வீராங்கனைகள் அனைவரும் உடனடியாக ஓடிச் சென்று நடுவரின் நலனை விசாரித்தனர்.
https://www.instagram.com/reel/DfzJ9ROBXEZ/?utm_source=ig_web_button_share_sheet
நல்வாய்ப்பாகப் பந்து தலையில் படாமல் தோள்பட்டைகளுக்கு இடையே பட்டதால், நடுவருக்குப் பலத்த காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. இதனால் மாற்று நடுவர் எவரும் இன்றி, அதே நடுவர் தொடர்ந்து போட்டியை வெற்றிகரமாக நடத்தினார்.
