“விஜய் – டி.கே. சிவக்குமார் சந்திப்பில் நடந்தது என்ன?”…. மேகதாது குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்…. உண்மையை உடைத்த மாணிக்கம் தாகூர்….!

By Nanthini on கார்த்திகை 17, 2026

Spread the love

சோனியா காந்தி அவர்களின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் மற்றும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் மேகதாது அணை விவகாரம் குறித்து எவ்வித விவாதமும் நடத்தவில்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு மாநில தலைவர்களும் கலந்துகொண்ட அந்த நிகழ்வில், மேகதாது விவகாரம் பேசப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், மேகதாது அணைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டிய முழுப் பொறுப்பும் பிரதமர் நரேந்திர மோடியிடமே உள்ளது என மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையுடன் செயல்படாமல், பிரதமர் கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாகச் செயல்படுவது போன்ற தோற்றம் நிலவுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இரு மாநிலங்களுக்கு இடையிலான இந்த நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில் மத்திய அரசு உரிய தலையீட்டைச் செய்ய வேண்டும் என்பதே அவரது கருத்தாக அமைந்துள்ளது.