ஐயோ… யாராவது காப்பாத்துங்க… 14 நாட்களாக மண்ணுக்குள் புதைந்து… மழைநீர் குடித்து உயிர் தப்பிய ஆசிரியர்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on கார்த்திகை 17, 2026

Spread the love

ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவைத் தொடர்ந்து, மலைக்கு அருகிலுள்ள பள்ளம் ஒன்றில் விழுந்து மாயமான பள்ளி ஆசிரியர் 14 நாட்களுக்குப் பிறகு சனிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டார். இந்திரகர் பஞ்சாயத்தில் உள்ள பள்ளியில் பணிபுரியும் மோகன் மகாராணா என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த ஆசிரியர், பள்ளத்தில் தேங்கியிருந்த சேறு கலந்த மழைநீரை மட்டுமே குடித்து உயிர் பிழைத்துள்ளார்.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட தங்சி கிராமத்திற்கு அருகே கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற நபர் ஒருவர், அந்தப் பள்ளத்தில் ஆசிரியர் சிக்கியிருப்பதைக் கண்டறிந்தார். பள்ளத்திற்கு உள்ளிருந்து மெல்லிய குரல் கேட்பதை உணர்ந்து அருகில் சென்று பார்த்தபோது, உள்ளே ஆசிரியர் இருப்பதை அவர் பார்த்துள்ளார்.

   

https://twitter.com/IndiaToday/status/2122249414475743743/video/1

   

இதையடுத்து அவர் உடனடியாகக் கிராம மக்களுக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராம மக்கள், பள்ளத்தில் சிக்கியிருந்த மோகன் மகாராணாவை பத்திரமாக மீட்டனர்