“அடுத்து எந்த கட்சிக்கு போகப் போகிறார்?”…. செல்வப்பெருந்தகையின் திமுக பாசத்தை மறைமுகமாகத் தாக்கிய அமைச்சர்…. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…..!

By Nanthini on கார்த்திகை 16, 2026

Spread the love

தமிழ்நாடு அரசியலில் சட்டம்-ஒழுங்கு விவகாரம் தொடர்பாக ஆளும் தரப்பினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே நடைபெற்று வரும் விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, தற்போதைய ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை முன்வைத்த விமர்சனத்திற்கு அமைச்சர் விஸ்வநாதன் பதிலளித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், செல்வப்பெருந்தகை எந்தக் கட்சியின் சார்பில் நின்று இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் என்பதே தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் தற்போது எந்தக் கட்சியில் இருக்கிறார் என்பதும், எதிர்காலத்தில் எந்தக் கட்சியில் இணையப் போகிறார் என்பதும் புரியவில்லை என அமைச்சர் விமர்சித்துள்ளார். முன்னதாக, திமுகவுடன் செல்வப்பெருந்தகை இணக்கமாகச் செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில், அமைச்சரின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.