சிக்கும் MLA அருள் விக்னேஷ்?…. 7 நாட்களில் அறிக்கை கேட்கும் NCW….. முதல்வர் விஜய்க்கு அடுத்த அதிர்ச்சி…..!

By Nanthini on கார்த்திகை 16, 2026

Spread the love

மாவட்ட ஆட்சியருக்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தகாத முறையில் குறுஞ்செய்தி (SMS) அனுப்பியதாக எழுந்த புகார் தொடர்பான விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தற்போது கையிலெடுத்துள்ளது. வெளியாகியுள்ள தகவல்களின்படி, இந்த விவகாரத்தில் எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் இடமளிக்காமல் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) உரிய விசாரணை நடத்த வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்தப் புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை 7 நாட்களுக்குள் தாக்கல் செய்யுமாறும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வரும் நிலையில், தற்போது தேசிய மகளிர் ஆணையமும் நேரடியாகத் தலையிட்டிருப்பது மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும், தேசிய மகளிர் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கும் மத்தியில் எழுந்துள்ள சூழல், முதலமைச்சர் விஜய்க்கு ஒரு அரசியல் நெருக்கடியாகப் பார்க்கப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் நிலவுகின்றன.