ஐயோ… 13 வயது சிறுமியை தனியாக அழைத்து பாலியல் அத்துமீறல்… அழுதுகொண்டே தாயிடம் கூறிய மாணவி… நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on கார்த்திகை 13, 2026

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகே உள்ள கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எம். புதுப்பாக்கம் கிராமத்திற்கு தனது உறவினரைப் பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்துச் சென்ற வெங்கடேஷ், அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அங்கிருந்து தப்பி ஓடி, தனது தாயிடம் நடந்தவற்றைக் கூறி அழுதுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சிறுமியின் தாய் மரக்காணம் காவல் நிலையத்தில் வெங்கடேஷ் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வெங்கடேஷைக் கைது செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே, காவல் நிலையத்தில் பாத்ரூமுக்குச் சென்றபோது அவர் தவறி விழுந்ததில் கை முறிவு ஏற்பட்டு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில், வெங்கடேஷ் மீது ஏற்கனவே பாலியல் குற்றம் தொடர்பான வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

   

இதையடுத்து, வெங்கடேஷ் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்ட போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். உறவினர் வீட்டிற்கு வந்த இடத்தில் 13 வயது சிறுமியிடம் அத்துமீறிய நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழைய பாலியல் குற்றவாளியைச் சுதந்திரமாக நடமாட விட்டதே இத்தகைய சம்பவத்திற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.