உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர மன உளைச்சல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் எவ்வளவுதான் ஆறுதல் கூறினாலும், தன்னைத் தானே அழகற்றவளாகக் கருதிய அவர் புகைப்படங்களைத் தவிர்ப்பதுடன் வகுப்பறையின் கடைசி வரிசையில் அமர்ந்து தனிமைப்படுத்திக் கொண்டார்.
கான்பூர் மற்றும் கோரக்பூரில் பல இடங்களில் சிகிச்சை அளித்தும் முன்னேற்றம் இல்லாத நிலையில், 2026 ஏப்ரல் மாதம் மனநல மருத்துவர் டாக்டர் ஆக்ரிதி பாண்டேவிடம் அவர் அழைத்துச் செல்லப்பட்டார். பரிசோதனையில் அந்த மாணவி ‘பாடி டிஸ்மார்பிக் டிஸார்டர்’ எனப்படும் உடல் தோற்றம் குறித்த தீவிர மனநலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து ஏழு மாதங்களாக வழங்கப்பட்ட ஆலோசனை மற்றும் அறிவாற்றல் நடத்தை சிகிச்சை மூலம் தற்போது அந்த மாணவியின் மனநிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
