உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் மீது காட்டு யானை ஒன்று திடீரென ஆக்ரோஷமாகத் தாக்குதல் நடத்தியது. சாலையில் சென்று கொண்டிருந்த அந்த இளைஞரை யானை வழிமறித்துத் தாக்கியதில், அவர் நிலைதடுமாறித் தனது பைக்குடன் கீழே விழுந்தார்.
கீழே விழுந்த அந்த இளைஞரை யானை மிதித்துக் கொல்ல முயன்றபோது, யானையின் பின்னங்கால் அவர் மீது லேசாகப் பட்டபோதிலும், அவர் மிக அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அருகில் இருந்தவர்கள் சத்தமிட்டு யானையை விரட்டியதைத் தொடர்ந்து, அந்த யானை அருகிலுள்ள வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றது.
https://twitter.com/rajtweets10/status/2120688555387420694/video/1
மயிரிழையில் உயிர் தப்பிய அந்த இளைஞரின் திகிலூட்டும் இந்தச் சம்பவம் வீடியோவாகப் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அப்பகுதியில் அதிகரித்து வரும் மனித-வனவிலங்கு மோதல்கள் குறித்த அச்சத்தையும் இது ஏற்படுத்தியுள்ளது.
