தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “”தவறு செய்தால் விடமாட்டேன்” என முதலமைச்சர் விஜய் தனது கட்சி எம்.எல்.ஏ.-க்களுக்குக் ‘கடும் எச்சரிக்கை’ விடுத்தார் என சேதக் கட்டுப்பாடு பணிக்காகச் செய்தித்தாள்களில் தகவல்களைப் பரப்பிவிட்டுள்ளனர். முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால், பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீதும், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீதும் உடனடியாக வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ஆனால் அந்த ‘கண்டிப்பான அதிகாரி’ செய்தது என்ன? இருவருக்கும் பட்டு ஆடைகள் உள்ளிட்ட தீபாவளிப் பரிசுகளைக் கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார். இதுதான் அவரது கடும் நடவடிக்கையா? பஞ்ச் டயலாக் மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை! உண்மையான நடவடிக்கையை எடுத்து, தான் எவ்வளவு கண்டிப்பானவர் என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வெறும் வாய் வார்த்தைகளால் எந்தப் பயனும் இல்லை என்று மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் ஆளுங்கட்சிக்கு எதிராகக் கடும் தாக்குதலைத் தொடுத்துள்ளார்.
