ஐயோ கடவுளே… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து… சாலையில் திடீரென குறுக்கிட்ட பன்றியால்… இளைஞர் சம்பவ இடத்தில் துடிதுடித்து பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

By Swetha on கார்த்திகை 12, 2026

Spread the love

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ராஜுலா தாலுகாவின் மண்டல் கிராமத்திற்கு அருகே நிகழ்ந்த கோர சாலை விபத்தில் 36 வயது இருசக்கர வாகன ஓட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரவீன்பாய் ரத்னாபாய் வாலா என்ற அந்த நபர், தனது கடைக்குச் சென்று கொண்டிருந்தபோது சாலையில் திடீரென காட்டுப்பன்றி ஒன்று குறுக்கிட்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .

விலங்கு எதிர்பாராதவிதமாக சாலையைக் கடந்தபோது, இருசக்கர வாகன ஓட்டி நிலைதடுமாறி வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தார். கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் .

   

https://twitter.com/nextminutenews7/status/2120473815771942914/video/1

   

இந்த விபத்து தொடர்பான முழு காட்சிகளும் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் நேரடியாகப் பதிவாகியுள்ளன. தற்போது இந்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. விபத்து நடந்த உடனேயே அவ்வழியாகச் சென்றவர்கள் அவரைக் காப்பாற்ற விரைந்த போதிலும், அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.