அம்பலமான கள்ளத்தொடர்பு… மிரட்டிய சிறுவன்… மாயமான மர்மம்… பள்ளி மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்… கடைசியில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை…!!

By Gayathri on கார்த்திகை 11, 2026

Spread the love

தெலங்கானாவில் கள்ளக்காதல் விவகாரத்தை வெளியே சொல்லிவிடுவேன் என மிரட்டிய பள்ளி மாணவனை, திருமணமான ஒரு பெண்ணும் அவரது காதலனும் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட அப்பெண்ணுக்கும், மற்றொரு இளைஞருக்கும் இடையே தகாத உறவு நீடித்து வந்த நிலையில், அதை அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவன் தற்செயலாக அறிந்து கொண்டுள்ளார். தனது ரகசியத்தை பிறரிடம் கூறிவிடுவான் என்ற அச்சத்திலும், மாணவன் தொடர்ந்து அதுகுறித்து மிரட்டி வந்ததாலும் ஆத்திரமடைந்த இருவரும், அவனைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டினர்.

திட்டமிட்டபடி மாணவனை ஆள்நடமாட்டமில்லாத பகுதிக்குத் தந்திரமாக வரவழைத்த இருவரும், அங்கு வைத்து அவனைத் தாக்கிப் படுகொலை செய்துவிட்டு உடலை மறைக்க முயன்றனர். மாணவன் மாயமானது குறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சந்தேகத்தின் அடிப்படையில் அப்பெண்ணையும் அவரது காதலனையும் பிடித்து விசாரித்தனர். அப்போது இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்; இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.