சென்னையில் காசிமேடு கடற்கரை அருகே தீபத் என்கிற சனி என்ற வாலிபர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றும், ஒன்றாக அமர்ந்து மது அருந்தலாம் என்றும் கூறி, அந்த வாலிபரை ஒரு கும்பல் காசிமேடு கடற்கரைக்கு அருகில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது.
https://twitter.com/IndiaToday/status/2120422301120553075/video/1
அங்கு வைத்து, அந்த கும்பல் தீபத்தை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலின் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் மொத்தம் ஆறு பேருக்குத் தொடர்பு இருக்கலாம் எனப் போலீஸார் சந்தேகிக்கின்றனர். தப்பியோடிய நபர்களைக் கைது செய்ய போலீஸார் தீவிரத் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.
