அடுத்த அதிர்ச்சி…. காசிமேட்டில் பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிக்கொலை… 48 மணி நேரத்தில் 17 கொலைகளா?…. பதறும் தமிழகம்…..!

By Nanthini on கார்த்திகை 11, 2026

Spread the love

சென்னை காசிமேடு பகுதியில் பிரபல ரவுடி சளி தீபக் (28) பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மீன்பிடி துறைமுகம் அருகே மது அருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறே இந்த கொடூரக் கொலைக்கு முக்கியக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட சளி தீபக் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 17 கொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ள நிலையில், காசிமேட்டில் நடந்துள்ள இந்த பட்டப்பகல் படுகொலை மக்களிடையே பெரும் அச்ச அலையை உருவாக்கியுள்ளது. தொடரும் இந்த வன்முறை சம்பவங்கள் சட்டம்-ஒழுங்கு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ள சூழலில், இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.