2 நிமிட அவசரம்… கண்முன்னே துடிதுடித்து அடங்கிய மகள் உயிர்… நடுரோட்டில் கதறி அழுத தந்தை… நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

By Gayathri on கார்த்திகை 10, 2026

Spread the love

ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சுரங்கப் பொறியியல் பயின்று வந்த 21 வயது மாணவி ஆயிஷா முஸ்பிரா, திங்கள்கிழமை காலை தன் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்தார். நல்லகுண்டா ஃபீவர் மருத்துவமனை அருகே அவர்கள் சென்றபோது, தவறான திசையில் அசுர வேகத்தில் வந்த எஸ்பிஐ வங்கி ஊழியரான தர்மராஜு என்பவரது வாகனம் இவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாணவி, தந்தையின் கண்முன்னே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வங்கி ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சில நிமிடங்களை மிச்சப்படுத்த வேண்டும் என்ற அவசரத்தில், படித்த மற்றும் பொறுப்பான பதவியில் உள்ளவர்களே போக்குவரத்து விதிகளை அப்பட்டமாக மீறுவது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. ஒருவரின் அலட்சியமும் விதிமீறலும், நாட்டுக்குச் சேவை செய்ய நினைத்த ஒரு இளம் பெண்ணின் எதிர்காலக் கனவையும், அவரது குடும்பத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் ஒரே நொடியில் சிதைத்துவிட்டது. சாலையில் பயணிக்கும் ஒவ்வொருவரும் போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை இக்கொடூர நிகழ்வு மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.