அடச்சீ… ஏற்கனவே திருமணமானதை மறைத்து… இளம்பெண்ணை ஏமாற்றிய நபருக்கு… போலீஸ் எதிரே பொதுமக்கள் தர்மஅடி… ஜெய்ப்பூரில் பரபரப்பு… இணையத்தில் வைரல் வீடியோ…!

By Swetha on கார்த்திகை 10, 2026

Spread the love

ஜெய்ப்பூரில் மதரஸா நடத்தி வரும் மௌலானா ஒருவரை, ஒரு கும்பல் கடுமையாகத் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் ஏற்கனவே திருமணமானவர் என்றபோதிலும், அதை மறைத்து மதரஸாவிற்கு வந்த 18 வயது இளம் பெண் ஒருவரை மூளைச்சலவை செய்து ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ஜெய்ப்பூரின் ‘நாயி கி தடி’ பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், அந்த மௌலானா பெண்ணை தவறாக வழிநடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தத் திருமண விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், ஜெய்சிங்புரா கோர் காவல் நிலைய போலீசார் அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாகக் கூறி மௌலானாவை முன்னதாகக் கைது செய்து காவலில் எடுத்தனர்.

   

https://twitter.com/CNNnews18/status/2120028422189789485/video/1

   

அதனைத் தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வெளியே அழைத்து வரப்பட்ட போது, அங்கு கூடியிருந்த கோபமடைந்த மக்கள் மற்றும் பெண்ணின் உறவினர்கள் போலீசாரின் முன்னிலையிலேயே அவரைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்கினர். பெரும் போராட்டத்திற்கு இடையே போலீசார் அந்த மௌலானாவை கூட்டத்திடமிருந்து மீட்டு பத்திரமாக அழைத்துச் சென்றனர்.