போபாலில் இருசக்கர வாகனத்தில் சென்றவாறு இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் கீழ், 23 வயதான அபிஷேக் உய்கே என்ற இளைஞரை போபால் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் குற்றவாளியைக் கண்டறிய 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்தனர். மேலும், தங்களது ரகசிய தகவல் தொடர்பாளர்கள் வலையமைப்பை முடுக்கிவிட்டு, 48 மணி நேரத்திற்குள் அவரைத் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அபிஷேக் உய்கே காவல்துறையினரின் விசாரணையின் போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, அவர் நீதிமன்றக் காவலில் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
