BREAKING: தேர்தலில் திமுக வெற்றி…. சற்றுமுன் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!

By Nanthini on கார்த்திகை 10, 2026

Spread the love

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில்திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில், திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் 74,489 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றி பெற்றிக் கழகத்தின் வேட்பாளர் நசீர் ராஜா 73,358 வாக்குகள் பெற்று குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இத்தேர்தல் முடிவை எதிர்த்தும், ஐ.பி.செந்தில்குமாரின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரியும் நசீர் ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தவெக வேட்பாளர் நசீர் ராஜாவின் மனுவை தள்ளுபடி செய்து ஐ.பி.செந்தில்குமாரின் வெற்றியை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, திண்டுக்கல் தொகுதி திமுகவினர் மற்றும் ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர்.