என்ன நடந்தது தெரியுமா?… கள்ளக்காதல் விவகாரம்… 10th படிக்கும் பையனை இப்படியா முடிப்பாங்க?!… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

By Gayathri on கார்த்திகை 10, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம், சின்னக்கொரு கொண்டா கிராமத்தில் பத்தாம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுவன் ரவி, கள்ளக்காதல் விவகாரத்தால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கணவரைப் பிரிந்து வசித்து வந்த அபர்ணா என்ற பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞருக்கும் இடையே தகாத உறவு நீடித்து வந்துள்ளது. இவர்களின் பழக்கத்தை நேரில் பார்த்த சிறுவன் ரவி, இச்செய்தியை வீட்டில் சொல்லிவிடுவேன் என்று எச்சரித்துள்ளார். தங்களின் ரகசியம் கசிந்துவிடும் என்ற அச்சத்தில் ஆத்திரமடைந்த இருவரும், சிறுவனை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டினர்.

திட்டத்தின்படி, கடந்த மாதம் 24-ஆம் தேதி சிறுவனை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திற்கு நைசாக அழைத்துச் சென்ற இருவரும், குளிர்பானத்தில் கொடிய களைக்கொல்லி நஞ்சைக் கலந்து கொடுத்துள்ளனர். அதை அருந்திய சிறுவனுக்கு தீவிர உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பயந்துபோன குற்றவாளிகள் தங்களது பாதகச் செயலை ஒப்புக்கொண்டனர். உடனடியாக கம்மம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் ரவி, அங்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அபர்ணா மற்றும் அஜய் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.