கொடுமையே…. பணக்கார கணவன் கடனாளியானதால் வந்த வினை… புதுக்காதலனுடன் சேர்ந்து கதையை முடித்த ஆன்மீக மனைவி… டெல்லியில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!

By Swetha on கார்த்திகை 10, 2026

Spread the love

டெல்லியைச் சேர்ந்த ரவீந்தர் சிங், தனது மனைவி ஆஷா மற்றும் மகன் ஹர்ஷித்துடன் வாழ்ந்து வந்த நிலையில், கை எலும்பு முறிவுக்கான பிசியோதெரபி சிகிச்சையின் போது ரீனா சிந்து என்ற பெண்ணைச் சந்தித்தார். ரீனாவின் அழகிலும் ஆன்மீக ஈடுபாட்டிலும் மயங்கிய ரவீந்தர், தனது குடும்பத்தை முற்றிலும் புறக்கணித்துவிட்டு அவருடன் வாழத் தொடங்கினார். டேராடூனில் உள்ள தனது தொழிற்சாலை மூலம் பெரும் பணக்காரராக விளங்கிய ரவீந்தர், ரீனாவின் கட்டாயத்தால் தனது முதல் மனைவி மற்றும் மகனுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொண்டார்.

அதன் பின்னர், அவர்கள் இருவரும் மொராதாபாத்திற்கு குடிபெயர்ந்து, அங்கு சுமார் 4 முதல் 5 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு ஆடம்பரமான வில்லாவைத் தங்கள் இருவர் பெயரிலும் வாங்கினர். அதன் தரைத்தளத்தில் ரீனா தனது பிசியோதெரபி கிளினிக்கைத் தொடங்கினார். சுமார் 20 ஆண்டுகள் அவர்கள் இணைந்து வாழ்ந்த நிலையில், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரவீந்தரின் தொழிலில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டு, அவர் பெரும் கடனாளியாக மாறினார்.

   

கடன்களை அடைப்பதற்காக, தாங்கள் வசிக்கும் ஆடம்பர வில்லாவை விற்றுவிட்டு ஒரு சிறிய பிளாட் வாங்கலாம் என்று ரவீந்தர் கூறினார். ஆனால், சொகுசு வாழ்க்கைக்கும் விலையுயர்ந்த கார்களுக்கும் பழகிப்போயிருந்த ரீனாவிற்கு இதில் உடன்பாடில்லை. அதே நேரத்தில், பரீதோஷ் என்ற மற்றொரு நபரும் ரீனாவின் வாழ்க்கைக்குள் நுழைந்ததால், ரவீந்தரின் வாழ்க்கையில் ஒரு கொடூரமான திருப்பம் ஏற்படத் தொடங்கியது.