அம்பை இடைத்தேர்தல் களம்…. களமிறங்குகிறாரா ஓ.பி.ரவீந்திரநாத்?…. திமுகவின் மாஸ்டர் பிளான்… பக்காவாக காய் நகர்த்தும் ஓபிஎஸ்…!

By Nanthini on கார்த்திகை 9, 2026

Spread the love

திமுக அரசுக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென குரல் எழுப்பியிருப்பது தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. திமுக எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்றது முதல் ஆளுங்கட்சியைத் தாக்கிப் பேசத் தயங்கி வந்த அவர், தேனி சிறையில் கைதிகள் தப்பியது மற்றும் தனிப்பிரிவு காவலர் (எஸ்.எஸ்.ஐ) கொலை போன்ற சட்டம்-ஒழுங்குப் பிரச்சனைகளைக் சுட்டிக்காட்டி தற்போது கடுமையான கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். பொதுவெளியிலும், பேட்டிகளிலும் அதிகம் பேசாத அவர், தற்போது வீரியமான அரசியல் நிலைப்பாட்டை எடுக்கத் தொடங்கியிருப்பது பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ளது.

இந்த அதிரடி அரசியல் மாற்றத்திற்குப் பின்னால் தேர்தல் வியூகம் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, வரவிருக்கும் அம்பை (அம்பாசமுத்திரம்) இடைத்தேர்தலில் தனது மூத்த மகன் ஓ.பி. ரவீந்திரநாத்தை (OPR) களமிறக்க ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான ஆரம்பக்கட்ட அரசியல் நகர்வுகளே இந்தத் தீர்க்கமான கண்டனங்கள் என்றும் கூறப்படுகிறது. தன் மகன் மூலமாக அரசியல் களத்தில் மீண்டும் செல்வாக்கை நிருபிக்கவும், தேனி தாண்டி தனது செல்வாக்கை விரிவுபடுத்தவும் அவர் இந்தத் தருப்பைப் பயன்படுத்திக் கொள்வதாகக் கணிக்கப்படுகிறது.