SI-க்கே இந்த நிலையா?… விடிய விடிய வெறியாட்டம்… தீபாவளியில் உறைந்த தமிழகம்… 24 மணி நேரத்தில் 10 உயிர்கள் பலி… பின்னணி என்ன?…!!

By Gayathri on கார்த்திகை 9, 2026

Spread the love

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை தினத்தின்போது அடுத்தடுத்து அரங்கேறிய தொடர் கொலை சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. முன்விரோதம், பட்டாசு வெடிப்பதில் உருவான மோதல் மற்றும் போதை தகராறு போன்ற பல்வேறு காரணங்களால் ஒரே நாளில் காவல்துறை அதிகாரி, இளைஞர்கள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட பலர் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் நடுரோட்டில் பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்த போதைக்கும்பலைத் தட்டிக்கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் உயிரிழந்த சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று திருச்சி சுங்கச்சாவடி அருகே வாய்க்கால் கரையோரம் சென்ற இரு இளைஞர்கள் வெட்டிக் கொல்லப்பட்டதுடன், பெரம்பலூர் கோவில் வளாகத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிகழ்வு பெரும் பதற்றத்தை உருவாக்கியது.

   

இதுதவிர சென்னை, கடலூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மதுபோதை வாக்குவாதங்கள் மற்றும் பழிவாங்கும் நோக்கில் ரவுடிகள் மற்றும் இளைஞர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். பண்டிகை நாளிலேயே அரங்கேறிய இந்த ரத்தக் களறி சம்பவங்கள் தொடர்பாகத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளைப் பிடிக்க தீவிரக் கைது நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.