ஐயோ கொடுமையே… சின்னப் பையன் மேலயா பட்டாசு வீசுவீங்க?… தட்டிக்கேட்ட குடும்பத்திற்கு நேர்ந்த கொடூரம்… ஹைதராபாத்தில் அதிர்ச்சி கத்திக்குத்து சம்பவம்…!

By Swetha on கார்த்திகை 9, 2026

Spread the love

ஹைதராபாத்தில் உள்ள படேல் நகர் மற்றும் காந்தி பவன் பகுதிகளில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக ஏற்பட்ட சிறு தகராறு, மூன்று இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான கத்திக்குத்து தாக்குதலாக மாறியுள்ளது. சாலையோரமாக நடந்து சென்ற ஒரு சிறுவன் மீது ஒரு கும்பல் பட்டாசை வீசியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அச்சிறுவனின் தாய்மாமன் தட்டிக்கேட்டபோது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் வெடித்துள்ளது.

இந்த வாக்குவாதத்தின் போது, சல்மான், அர்பாஸ் மற்றும் பல நபர்கள் அடங்கிய கும்பல் கத்திகளுடன் பாய்ந்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த கொடூரத் தாக்குதலில் ஷேக் வஹீத், ஷேக் இம்ரான் மற்றும் ஷேக் ஷாபாஸ் ஆகிய மூன்று பேர் படுகாயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் இது பழைய தனிப்பட்ட மற்றும் அரசியல் பகை காரணமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

   

https://twitter.com/i/status/2119656072931860910

   

கத்திக்குத்தில் படுகாயமடைந்த மூன்று இளைஞர்களும் உடனடியாக சிகிச்சைக்காக உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து பேகம் பஜார் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.