பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த ஒரு மாணவிக்கு, வழியில் திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அந்த சிறுமி சாலையோரம் அமர்ந்து தவித்தாள். இதைப் பார்த்த ஒரு பெண்மணி உடனடியாக அந்த சிறுமிக்கு உதவ ஓடிவந்தார். அதே நேரத்தில் அவ்வழியாகச் சென்ற ஒரு சிறுவனும் அங்கு நின்று, அந்தப் பெண்மணியுடன் சேர்ந்து சிறுமிக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து உதவினான்.
இருப்பினும், மாணவியின் உடல்நிலை மற்றும் வலியின் தன்மையைக் கண்ட அந்த நபர் , அவளுக்கு ஒரு பெண்ணின் உதவி உடனடியாகத் தேவைப்படும் என்பதை உணர்ந்தான். உடனே அவன் அருகில் இருந்த மற்றொரு பள்ளி மாணவியை உதவிக்கு அழைத்தான். அங்கு வந்த அந்த மாணவி, பாதிக்கப்பட்ட சிறுமியின் நிலையை உடனடியாகப் புரிந்துகொண்டு, அவளுக்குத் தேவையான அவசர உதவிகளையும் ஆதரவையும் வழங்கினாள்.
https://twitter.com/Santoshi_P_/status/2119312224242016527/video/1
பொதுவெளியில் இக்கட்டான சூழ்நிலையில் தவித்த பள்ளி மாணவிக்கு, அறிமுகமில்லாத நபர்கள் காட்டிய இந்த மனிதநேயமும் சமயோசித புத்தியும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, அந்த சிறுவனின் முதிர்ச்சியான அணுகுமுறையும், மற்றொரு சிறுமியின் உடனடிப் புரிதலும் ஒருவருக்கொருவர் உதவும் சமுதாயப் பொறுப்பை உணர்த்துவதாக இந்த நிகழ்வு அமைந்தது.
