திக்… திக்… கஃபே உரிமையாளரை பதுங்கிருந்து… இரும்புக் கம்பிகளால் அடித்து நொறுக்கிய கும்பல்… ஜெய்ப்பூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்… நடுங்கவைக்கும் CCTV காட்சி…!

By Swetha on கார்த்திகை 9, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள வைசாலி நகர் பகுதியில், ‘ஓவன் தி பேக்கரி கஃபே’ என்ற உணவகத்தை நடத்தி வரும் 34 வயதான மயங்க் கோபாலியா என்ற கஃபே உரிமையாளர் பதுங்கியிருந்து கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் 5-ஆம் தேதி இரவு சுமார் 9:45 மணியளவில், தனது கஃபேயை மூடிவிட்டு அவர் நடந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று, தெருவின் திருப்பத்தில் முன்பே திட்டமிட்டு மயங்கிற்காகக் காத்திருந்துள்ளது. அவர் அந்தப் பகுதிக்குள் நுழைந்தவுடன், இரும்புக் கம்பிகள் மற்றும் தடிகளுடன் பாய்ந்த அக்கிரமக்காரர்கள் அவரைச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். முதலில் அவரது தலையில் பலத்த அடி விழுந்ததில் அவர் நிலைகுலைந்து சாலையில் விழுந்தார்; அதன் பின்னரும் விடாமல் அவரது முதுகு மற்றும் கால்களில் அக்கும்பல் கொடூரமாக அடித்து நொறுக்கியது. மயங்க் சுயநினைவை இழந்து, அவர் இறந்துவிட்டார் என்று நினைத்த அக்கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இந்த கொடூரத் தாக்குதல் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

   

https://dainik.bhaskar.com/aso3JktGT7b

   

இரத்த வெள்ளத்தில் கிடந்த மயங்கை மீட்ட அங்கிருந்தவர்கள், அவரை உடனடியாக ஜெய்ப்பூரில் உள்ள போர்டிஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தலையில் தீவிர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சம்பவத்தன்று மதியம் கஃபேயில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியரின் ஆண் நண்பர் அடிக்கடி அங்கு வருவதற்கு மயங்க் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதனால் ஏற்பட்ட தகராறில் அந்த நபர் மயங்கிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. இப்புகாரின் அடிப்படையில் வைசாலி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.