“ரூம்ல ஆள் இருக்காங்க”…. சாவியைக் கேட்டு வாங்கிய MLA-வுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போபாலில் பரபரப்பு….!

By Nanthini on கார்த்திகை 8, 2026

Spread the love

மத்திய பிரதேச மாநிலம் மதிப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தினேஷ் ஜெயின் பாஸ், டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு போபால் திரும்பினார். தலைநகர் போபாலில் அமைந்துள்ள எம்எல்ஏக்கள் குடியிருப்பு வளாகத்தின் பிளாக் 3-ல் உள்ள 14 மற்றும் 15 ஆகிய இரண்டு அறைகள் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. அங்கு ஓய்வெடுப்பதற்காக சென்ற எம்எல்ஏ, அங்கிருந்த ஊழியரிடம் அறைகளின் சாவியைக் கேட்டபோது, 15-வது அறையில் ஆள் இருப்பதாகக் கூறி 14-வது அறையின் சாவியை மட்டும் ஊழியர் வழங்கியுள்ளார்.

ஊழியரின் பதிலால் சந்தேகமடைந்த எம்எல்ஏ தினேஷ், தனக்கு ஒதுக்கப்பட்ட 15-வது அறையின் பக்கம் சென்று பார்த்தபோது கதவு லேசாக திறந்திருந்தது. உள்ளே எட்டிப்பார்த்த அவருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது; அந்த அறையில் இளைஞர் ஒருவரும், இளம்பெண் ஒருவரும் தவறான முறையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதைக் கண்டு கோபமடைந்த எம்எல்ஏ சத்தம் போடவே, பதறியடித்த அந்த இளம் ஜோடி உடனடியாக அறையை விட்டு வெளியேறி தப்பி ஓடியது.

   

தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு ஓய்வறையில் வெளியாட்கள் அத்துமீறி நுழைந்தது குறித்தும், அவர்களுக்கு அனுமதி அளித்தது யார் என்பது குறித்தும் அங்கிருந்த ஊழியர்களிடம் எம்எல்ஏ தினேஷ் ஜெயின் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பாதுகாப்பு குறைபாடு மற்றும் நிர்வாக சீர்கேடு காரணமாக நடந்துள்ள இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து அவர் உடனடியாக சட்டசபை செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

   

இச்சம்பவம் அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். எம்எல்ஏக்கள் மட்டுமே தங்க அனுமதி உள்ள உயர் பாதுகாப்பு மண்டலத்திற்குள் அந்த இளம் ஜோடி எவ்வாறு நுழைந்தது என்பது குறித்து மக்கள் தொடர்பு அதிகாரி விசாரணையை உறுதி செய்துள்ளார். பாதுகாப்பு நடைமுறைகளை கேள்விக்குறியாக்கியுள்ள இந்த விவகாரம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.