துபாய் மாலில் ஷாப்பிங் செய்துகொண்டிருந்தபோது வந்த ஒரு போன் கால்… சாதாரண பெண்ணுக்கு அடித்த ரூ.62 கோடி ஜாக்பாட்…. ஒரே இரவில் மாறிய வாழ்க்கை….!

By Nanthini on கார்த்திகை 8, 2026

Spread the love

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வாழ்க்கையை லாட்டரி அதிர்ஷ்டம் ஒரே இரவில் மாற்றி அமைக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதுண்டு. அந்த வகையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மீனா சரீன் என்ற பெண், துபாயில் பணிபுரியும் தனது கணவருடன் அங்கு வசித்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக நம்பிக்கை தளராமல் தொடர்ச்சியாக லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வந்த இவருக்கு, தற்போது எதிர்பாராத வகையில் மிகப்பெரிய ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற குலுக்கலில், மீனா சரீன் வாங்கிய 304251 என்ற எண் கொண்ட டிக்கெட்டிற்கு முதல் பரிசான 25 மில்லியன் திர்ஹாம் கிடைத்தது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.62 கோடியாகும். துபாயில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் அவர் உலாவிக் கொண்டிருந்தபோது, லாட்டரி நிறுவன அமைப்பாளர்களிடமிருந்து இந்த வெற்றிக் செய்தி போன் மூலமாகத் தெரிவிக்கப்பட்டது.

   

திடீரெனத் தொலைபேசியில் 62 கோடி ரூபாய் பரிசு விழுந்த செய்தியைக் கேட்டதும், மீனா சரீன் அளவில்லா மகிழ்ச்சியிலும் அதிர்ச்சியிலும் திக்குமுக்காடிப் போனார். சில வினாடிகள் உடலெல்லாம் நடுங்கிப் போய் இயல்பு நிலையை இழந்தவர், பின்னரே சற்றே மீண்டு வந்து தன் மீதான அதிர்ஷ்டத்தை நம்பத் தொடங்கினார். ஒரே நாளில் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட இந்த வெற்றி, அவரது நீண்ட நாள் காத்திருப்பிற்கு கிடைத்த பரிசாக அமைந்துள்ளது.

   

இந்த பரிசுத் தொகையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இன்னும் முழுமையாக திட்டமிடவில்லை என்று கூறும் மீனா சரீன், “பரிசுத் தொகையின் ஒரு கணிசமான பகுதியை அறக்கட்டளைப் பணிகளுக்கும், உதவி தேவைப்படும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்க முடிவு செய்துள்ளேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வெற்றித் தொகையைத் தன்னுடன் டிக்கெட் வாங்கிய மற்ற மூன்று பேருடன் பகிர்ந்து கொள்ளப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.