தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான கிங்காங்கின் தந்தை ஏழுமலை (78) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். நாடு முழுவதும் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் இவ்வேளையில், கிங்காங்கின் குடும்பத்தில் நிகழ்ந்துள்ள இந்தத் திடீர் இழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த ஏழுமலையின் உடல் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஏழுமலையின் மறைவுச் செய்தியை அறிந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். சென்னை எம்.ஜி.ஆர் நகரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரையுலகினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, கிங்காங் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அவரது இறுதிச் சடங்குகள் இன்று காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.
