திக் திக்… தீபாவளி ஷாப்பிங் சென்ற… மாநில குத்துச்சண்டை வீராங்கனை படுகொலை… நெடுஞ்சாலை ஓரத்தில் இரத்த வெள்ளத்தில் சடலம் மீட்பு… உ . பி – யில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

By Swetha on கார்த்திகை 8, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், 26 வயதான மாநில அளவிலான குத்துச்சண்டை தங்கப் பதக்க வீராங்கனையும், உடற்பயிற்சி கூட பயிற்சியாளருமான மந்தாஷா குமாரி படுகொலை செய்யப்பட்டு, அவரது உடல் நெடுஞ்சாலை ஓரத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான்பூர்-பிரயாக்ராஜ் தேசிய நெடுஞ்சாலையில் மகாராஜ்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை இரத்த வெள்ளத்தில் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சனிக்கிழமையன்று அந்த உடல், உன்னாவ் மாவட்டம் கங்காகாட் பகுதியைச் சேர்ந்த மந்தாஷாவினுடையது என்பது அவரது குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டது.

மாநில அளவில் குத்துச்சண்டையில் தங்கம் வென்றுள்ள மந்தாஷா, ஜாஜ்மாவ் பகுதியில் உள்ள ‘பியூஷன் பிட் ஜிம்’ என்ற உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் தீபாவளிப் பண்டிகைக்காகப் பொருட்கள் வாங்க லால் பங்களா சந்தைக்குச் சென்ற அவர், அதன்பின் வீடு திரும்பவில்லை. இரவு 7 மணிக்குப் பிறகு அவரது மொபைல் போனும் அணைக்கப்பட்டு இருந்தது. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் அவரைத் தேடிவிட்டு, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

   

https://twitter.com/JtrahulSaini/status/2119029504584863815/video/2

   

மந்தாஷா திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டு, உடல் நெடுஞ்சாலையில் வீசப்பட்டிருப்பதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். அவரது தாயார் தனது மகளின் காதலன் மீது சந்தேகம் தெரிவித்துள்ள நிலையில், முன்னாள் குத்துச்சண்டை வீரரான அவரது தந்தை, மந்தாஷா பணியாற்றிய ஜிம்மிற்கு வந்த ஒரு இளைஞர் மீது சந்தேகம் எழுப்பியுள்ளார். அந்த இளைஞர் மந்தாஷாவின் மருத்துவமனை சிகிச்சையின் போது நேரில் வந்து பார்த்தவர் என்றும் கூறப்படுகிறது. இந்த வழக்கை பதிவு செய்துள்ள போலீசார், தடயங்கள் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.