ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டம் கர்கோடாவில் உள்ள ‘ஸ்ரீ ஷியாம் மிஷ்தான் பண்டார்’ என்ற இனிப்புக் கடையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, மிகவும் சுகாதாரமற்ற சூழலில் வைக்கப்பட்டிருந்த ரஸ்குல்லாக்களில் ஈக்கள் மொய்த்துக் கொண்டு அசுத்தமாக இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு அந்த கடையில் இருந்த ஒட்டுமொத்த இருப்பையும் அதிகாரிகள் உடனடியாக பறிமுதல் செய்து அழித்தனர். இதில் 280 கிலோ ரஸ்குல்லாக்கள் மற்றும் இனிப்புகள் செய்ய பயன்படுத்தப்படும் 30 கிலோ சேனா ஆகியப் பொருட்கள் அடங்கும்.
https://twitter.com/IndiaToday/status/2118879953236394274/video/1
மேலும், அந்த இனிப்புகள் மற்றும் மூலப்பொருட்களின் மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இனிப்புக் கடையின் மீது அடுத்தகட்ட கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
